எங்கு இறக்கி விட்டாலும் கலக்குவேன்! - ஹர்திக் பாண்டியா அதிரடி

இந்திய அணியில் இப்போது ஹாட் டாப்பிக் ஹர்திக் பாண்டியாதான். ஆல்-ரவுண்டராக இவர் அறியப்பட்டாலும், தனது அதிரடி பேட்டிங்குக்காகப் பிரபலமடைந்துள்ளார். தற்போது பாண்டியா, 'எந்த இடத்தில் பேட்டிங்கில் இறக்கி விட்டாலும் நான் கலக்குவேன்' என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 

ஹர்திக் பாண்டியா

தனது ஆட்டம் குறித்து பாண்டியா, 'தற்போது எனக்கு நடந்துகொண்டிருக்கும் அனைத்து விஷயங்களும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பேட்டிங், பௌலிங் ஆகிய இரண்டு துறைகளிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறேன். அதில் திறமையுடன் விளங்க கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். என் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என் ஆட்டத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆட்டத்தின் நிலைமையைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் நான் விளையாடுகிறேன். சில நேரங்களில் நாம் நினைப்பதுபோல் விளையாட முடியாது. இது கிரிக்கெட் விளையாட்டு. அதைப்போலவும் சில நாள்கள் இருக்கத்தான் செய்யும். ஒரு சட்டகத்தில் மட்டும் அடங்கும் கிரிக்கெட் வீரராக என்னை நினைக்கவில்லை. நிலைமைக்கு தகுந்ததுபோல் என்னை மாற்றிக் கொள்கிறேன். எனது சிக்ஸர்களுக்காக நான் அறியப்பட்டாலும் மிகவும் நிதானமாக ஆடிய பல இன்னிங்ஸ்களும் இருக்கிறது' என்று பேசியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!