மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணிக்கு 233 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில், இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகளைத் தோற்கடித்து ஹாட்ரிக் வெற்றியை ருசித்துள்ளது இந்திய அணி. இந்நிலையில், இன்று நடந்துவரும் போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதி வருகின்றன. 

Deepti Sharma


டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்தத் தொடரில் நல்ல தொடக்கம் தந்து வந்த பூனம் மற்றும் ஸ்மிரிதி மந்தனா இன்று ஏமாற்றம் அளித்தனர். பூனம் 16, ஸ்மிரிதி 8 ரன்களில் வெளியேறினர். பின்னர், கேப்டன் மித்தாலி ராஜ் மற்றும் தீப்தி ஷர்மா சரிவில் இருந்து அணியை மீட்டனர். இருவரும் சற்று நிலைத்து நின்று ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 


தீப்தி ஷர்மா 78, மித்தாலி ராஜ் 53 ரன்கள் எடுத்தனர். இதனால், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் ஶ்ரீபளி வீரக்கொடி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி சற்று நேரத்தில் களமிறங்க உள்ளது.


ஆறு புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி, ஏற்கெனவே அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!