புதிய பயிற்சியாளர் நியமனம்... கோலியுடன் பி.சி.சி.ஐ ஆலோசனை!

புதிய பயிற்சியாளர் நியமனம் குறித்து கோலியுடன் விவாதிக்க, மேற்கிந்தியத் தீவுக்குச் செல்கிறார் பி.சி.சி.ஐ தலைமைச் செயல் அதிகாரி ராஹுல் ஜோரி.

கோலி

இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அனில் கும்ப்ளே, கடந்த மாதம் தனது பதவியில் இருந்து விலகினார். சாம்பியன்ஸ் ட்ராபியில் பாகிஸ்தான் அணியிடம் தோற்றது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் கருத்து வேறுபாடு ஆகிய காரணங்களால் அவர் பதவி விலகியதாக கூறப்பட்டது. இதையடுத்து புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்தது. மேலும், அடுத்து நடக்கவிருக்கும் இலங்கையுடனான தொடருக்கு முன்னர் பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று அறிவித்தது பி.சி.சி.ஐ.

இந்நிலையில், புதிய பயிற்சியாளர் நியமனம் குறித்து கோலியுடன் விவாதிக்க, மேற்கிந்திய தீவுக்குச் செல்கிறார் பி.சி.சி.ஐ தலைமை செயல் அதிகார் ராஹுல் ஜோரி. இதையடுத்து, ஜூலை 10-ம் தேதி பயிற்சியாளருக்கான நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளது. விரேந்தர் சேவாக், வெங்கடேஷ் பிரசாத், ரவி சாஸ்திரி, டாம் மூடி உள்ளிட்டோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். தற்போது இந்திய அணி தலைமைப் பயிற்சியாளர் இல்லாமல் மேற்கிந்திய தீவுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!