வெளியிடப்பட்ட நேரம்: 22:17 (05/07/2017)

கடைசி தொடர்பு:11:38 (06/07/2017)

'தோல்விக்குக் காரணம் தோனி இல்லை...' கவாஸ்கர் காட்டம்!

இந்திய கிரிக்கெட் அணி பிரமாதமாக விளையாடி வந்த நிலையில், சாம்பியன்ஸ் ட்ராபி, இந்தியாவிற்குதான் என பல முன்னணி வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் சொல்லி வந்தனர். அதற்கு ஏற்றவாறு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது. இதனால், ரசிகர்கள் மிகுந்த கோபத்துக்கு ஆளானார்கள். இதனைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி-20 போட்டிக்கான தொடரை விளையாடி வருகிறது.

Dhoni

 

முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்டது. இரண்டாம் போட்டியிலும், மூன்றாம் போட்டியிலும், மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்தியா  தோல்வியுற்றது. இதனால், சமூக வலைதளங்களிலும், பேட்டிகளிலும் இந்த தோல்விக்கு காரணம் தோனிதான் என குற்றம்சாட்டப்பட்டது. இவர் அடித்து ஆடியிருந்தால் வென்றிருக்கலாம் என்றெல்லாம் பேசப்பட்டது.

Gavaskar

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுனில் கவாஸ்கர், "தோனி இந்திய அணிக்காக பல போட்டிகளில், கடைசி வரை நின்று அடித்து வெற்றி பெற செய்திருக்கிறார். அதனை யாராலும் மறுக்க முடியாது. 4-வது போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததும், அனைவரும் தோனியை சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். அது மிகவும் தவறு. தோனியை குறை கூறினால் அப்போது நீங்கள் மற்ற வீரர்களையும் குறை கூற வேண்டும். ஏனென்றால், அந்தப் போட்டியில் தோனியும் மற்ற வீரர்களைப்போல விளையாடி இருந்தால், 110 ரன்களுக்கு அணி சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்திருக்கும். எனவே, தோனியை குறைகூறுவதை நிறுத்த வேண்டும்" என்றார். 

இதையடுத்து, நாளை 5-வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே, இந்திய அணி தொடரைக் கைப்பற்ற முடியும் என்று குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க