ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா!

இந்திய அணி, ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் 0-3 என்ற கணக்கில் பாகிஸ்தானை வென்று, கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

பங்கஜ் அத்வானி

ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி, கிர்கிஸ்தான் நாட்டில் பிஷ்கேக் நகரில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணியின் சார்பில் பங்கஜ் அத்வானி மற்றும் லக்‌ஷ்மண் ராவத் ஆகியோர் பங்கேற்றனர். கோப்பைக்கான இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. 

பாகிஸ்தான் அணியின் சார்பில், மொகமது பிலால் மற்றும் பாபர் மாசிக் ஆகியோர் பங்கேற்றனர். ஒற்றையர் போட்டியில், தனது அனுபவ ஆட்டத்தால் 83 புள்ளிகள் பெற்று வெற்றிபெற்றார். மற்றொரு ஒற்றையர் போட்டியில், லக்‌ஷ்மண் ராவத் அதிரடியான வெற்றியைப் பதிவு செய்தார். பின்னர் நடந்த இரட்டையர் போட்டியிலும் பங்கஜ் மற்றும் லக்‌ஷ்மண் இணைந்து மற்றுமொரு வெற்றியைப் பதிவுசெய்ய, இந்திய அணி 0-3 என்ற கணக்கில் வெற்றிபெற்று, கோப்பையைக் கைப்பற்றியது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!