கால்பந்து தரவரிசையில் இந்திய அணி அபார முன்னேற்றம்!

ஃபிபா கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணி 96-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Indian Football Team rises in Football Team Rating

கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் இந்திய அணி சர்வதேச அளவில் கலக்கினாலும், கால்பந்தில் மட்டும் இன்னும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் கால்பந்தில் இந்தியாவை முன்னேற செய்ய, விளையாட்டுத் துறையும் தொடர்ந்து நடவடிக்கைகளில் எடுத்து வருகிறது. குறிப்பாக, இளம் வீரர்களை அடையாளம் காண ஐ.எஸ்.எல் போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும், உள்கட்டமைப்பு வசதிகளும் சர்வதேச அளவில் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே ஃபிபாவின் சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியல் இன்று வெளியானது. இதில் இந்திய அணி 4 இடங்கள் முன்னேறி 96-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 1996-ல் இந்திய அணி 94-வது இடத்தைப் பிடித்தது. இதற்குப் பிறகு, இந்திய அணியின் சிறந்த முன்னேற்றம் இதுவாகும். அண்மையில் நேபால் மற்றும் கிர்கிஸ்தான் அணிகளுடன் நடந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால்தான் இந்த முன்னேற்றம் எனக் கூறப்படுகிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!