வெளியிடப்பட்ட நேரம்: 00:07 (07/07/2017)

கடைசி தொடர்பு:10:05 (07/07/2017)

கோப்பையை வெல்லுமா இந்தியா? 206 ரன்கள் இலக்கு வைத்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி..!

மேற்கிந்தியத் தீவுகள் அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, ஷாய் ஹோப் 51 ரன்களை எடுத்துள்ளார். 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒரு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இன்று, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 5-வது  போட்டி ஜமைக்காவிலுள்ள கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய லீவிஸூம், கெய்ல் ஹோப்பும் களமிறங்கினர். பாண்டியா பந்தில் 9 ரன்னில் கோலியிடம் கேட்ச் கொடுத்து லீவிஸ் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப், நிதானமாக ஆடி 51 ரன்களைக் குவித்தார். கெய்ல் ஹோப் 46 ரன்களைக் குவித்தார். 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 205 குவித்தது. இந்திய அணி சார்பில் முகம்மது சமி 4 விக்கெடுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இந்திய அணி, 6 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 31 ரன்களை எடுத்துள்ளது. ஷிகர் தவான் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். நடந்த முடிந்த நான்கு போட்டிகளில், இந்திய அணி 2 போட்டிகளிலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டி, மழையின் காரணமாக ரத்துசெய்யப்பட்டது.