கோலி அதிரடி..! கோப்பையைக் கைப்பற்றியது இந்திய அணி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5-வது போட்டியில், இந்திய அணி அபார வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது. 


 மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒரு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இன்று, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 5-வது போட்டி, ஜமைக்காவிலுள்ள கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள், 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.

தொடக்க வீரராகக் களமிறங்கிய ஷிகர் தவான், முதல் ஓவரிலேயே 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். ரஹானே 39 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தினேஷ் கார்த்திக் கோலியுடன் இணைந்து ஆடினார். அதிரடியாக ஆடிய கோலி, 100 ரன்களைக் கடந்தார். மறுபக்கம் தினேஷ் கார்த்திக்கும் நிதானமாக ஆடி அரை சதம் கடந்தார். இறுதியில், இந்தியா 36.5 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. 5 போட்டிகள்கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!