கோலியின் இந்தச் சோகச் சாதனையைக் கவனிச்சீங்களா?

சிறிது தடுமாறினாலும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்தியா. முதல் போட்டி மழையால் கைவிடப்பட, இரண்டு மற்றும் மூன்றாவதுப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. நான்காவதுப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது. இதனால், இந்திய அணிமீது கடுமையான விமர்சனம் முன் வைக்கப்பட்டது. குறிப்பாக, தோனி மற்றும் கோலி மீது விமர்சனம் வைக்கப்பட்டது.

Virat Kohli

இதையடுத்து, நேற்று நடந்த ஐந்தாவதுப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. கேப்டன் கோலி சதமடித்து சேஸிங்கை வெற்றிகரமாக முடித்தார். முக்கியமாக சேஸிங் சதத்தில், சச்சினின் சாதனையை கோலி முறியடித்தார். ஆனால், இதே தொடரில் அவர் மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார். அதன்படி, ஒரு நாள் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் டாஸில் தோல்வியடைந்த நான்காவது இந்திய கேப்டன் கோலி ஆவார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐந்து போட்டிகளில், ஒரு போட்டியில்கூட கோலி டாஸை வெல்லவில்லை. ஐந்து போட்டிகளிலும், கோலி டெய்ல்ஸைத் தேர்ந்தெடுக்க, ஹெட்ஸே விழுந்தது. இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர் ஐந்து போட்டிகளிலும் டாஸ் வென்றார்.

இதற்கு முன், கடந்த 2011-ம் ஆண்டில் இங்கிலாந்து தொடரில் அனைத்துப் போட்டிகளின், டாஸிலும் தோனி தோல்வியடைந்தார். அதேபோல, ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் ரஹானேவும், கடந்த 1984-85 ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கவாஸ்கரும் தொடரின் அனைத்துப் போட்டிகளின் டாஸிலும் தோல்வியடைந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!