தனக்கே உரிய 'தனி ஸ்டைலில்' கேக் வெட்டிய தோனி!

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி, நேற்று தனது 36-வது பிறந்தநாளை தனக்கே உரிய பாணியில் கேக் வெட்டி கொண்டாடினார். 

 

 
இந்திய அணி தற்போது, மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. ஜூலை 7-ம் தேதியான நேற்று, தோனியின் பிறந்தநாள். உலக கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் அனைத்துத்துறை சார்ந்தவர்களும் தோனியை வாழ்த்து மழையில் நனைய வைத்தனர். ஒரு நாள் தொடரை வெற்றிகரமாக முடித்துவிட்ட நிலையில், நேற்று தோனி தன் பிறந்தநாளை சக வீரர்களுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார். ஸ்டம்பிங், ரன் அவுட், சிக்ஸர் அடிப்பது என எல்லாவற்றிலும் தனக்கென ஒரு ஸ்டைலை வைத்திருப்பவர் தோனி. நேற்று வெட்டிய கேக்கிலும் தனக்கான ஸ்டைலைக் காட்டினார்.

 

அப்போது வீரர்கள் சூழ்ந்து நிற்க, கேக் வெட்டத் தயாரானார் தோனி. கேக்கை வெட்டியதும், தவான் முன்னே வந்து கேக்கை தோனியின் முகத்தில் பூசுவதற்குத் தயாராவதற்கு முன்னதாகவே, தானே கேக்கில் தன் முகத்தை புதைத்துக்கொண்டு, தனக்கே உரிய பாணியில் வித்தியாசமாகக் கொண்டாடினார். இருந்தாலும், வீரர்கள் மீண்டும் ஒரு முறை அவர் மீது  கேக்கைப் பூசிக் கொண்டாடினர். 

இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகப் பரவிவருகிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!