வெளியிடப்பட்ட நேரம்: 19:26 (08/07/2017)

கடைசி தொடர்பு:19:26 (08/07/2017)

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்... இந்திய வீராங்கனைக்கு தங்கம்!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சுதா சிங் 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார்.

India's Sudha Singh wins gold medal in women's 3000-meter steeplechase

22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்தமுறை இந்தியாவின் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது. 45 நாடுகளைச் சேர்ந்த  655 வீரர், வீராங்கனைகள் இந்தத் தடகளப் போட்டியில் பங்கேற்று உள்ளனர். இந்தியா சார்பில் 94 வீரர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இதில் முதல் நாளில் தமிழகத்தைச் சேர்ந்த லக்ஷ்மணன் 5,000  மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றிருந்தார். மேலும் 400 மற்றும்  1,500 மீட்டர் பிரிவுகளில் முறையே இந்தியாவின் நிர்மலா ஷாரான் மற்றும் சித்ரா ஆகியோர் தங்கம் வென்றனர்.

இதனிடையே இன்று இந்திய வீராங்கனை சுதா சிங் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் கலந்துகொண்டு அவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் பந்தைய இலக்கை 9.59 நிமிடங்களில் அடைந்து வெற்றிப்பெற்றுள்ளார். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா 7 தங்கப்பதக்கங்களை தட்டிச் சென்றுள்ளது. மேலும் புள்ளிகள் பட்டியலிலும் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது.