ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு எதிரானப் போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் நடந்துவருகிறது. இதில், இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகளைத் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்தது இந்தியா. 


இந்நிலையில், இன்று நடைபெற்றப் போட்டியில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணி தொடக்கம் முதலே ரன் குவிப்பில் ஈடுபட்டது. குறிப்பாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான லிஸ்லி லீ அதிரடியாக விளையாடினார். அவர் 65 பந்துகளில் 92 ரன்கள் விளாசினார். அதே போல அந்த அணியின் கேப்டன் டேன் வான் நெய்கெர்க்கும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இதனால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 273 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். இதனால், உலகக் கோப்பை தொடரில் வழக்கமாக கிடைத்த தொடக்கம், இந்தப் போட்டியில் கிடைக்கவில்லை.
தீப்தி ஷர்மா மட்டும் சிறப்பாக விளையாடி 60 ரன்கள் குவித்தார். இந்திய அணி 46 ஓவர்கள் முடிவில் 158 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 115 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!