வெளியிடப்பட்ட நேரம்: 23:56 (09/07/2017)

கடைசி தொடர்பு:23:56 (09/07/2017)

'இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் திரும்ப வேண்டும்!'- கங்குலி யாருக்கு அழைப்பு விடுத்தார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு நேற்று 45-வது பிறந்த நாள். அவரின் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விரும்பிகள் பலரும் அவருக்கு ட்விட்டர் மற்றும் இணையதளங்கள் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பினர்.

கங்குலியுடன் தாக்கூர்

இப்படி வாழ்த்துச் செய்தி அனுப்பியதில் பிசிசிஐ-ன் முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூரும் ஒருவர் ஆவார். தாக்கூர், 'அன்புள்ள கங்குலிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறேன். புதிதாக உருவாகி வரும் கிரிக்கெட் வீரர்களை நீங்கள் தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும்' என்று தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவித்த கங்குலி கூடுதலாக, 'இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் திரும்ப வேண்டும்' என்று கூறி திகைக்க வைத்துவிட்டார்.

பிசிசிஐ--யின் தலைவராக இருந்த போது தாக்கூர், உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட லோதா கமிட்டியின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த சுணக்கம் காட்டினார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. இதனால் அவரை இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து உச்ச நீதிமன்றம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.