வெளியிடப்பட்ட நேரம்: 00:47 (10/07/2017)

கடைசி தொடர்பு:07:51 (10/07/2017)

டி-20 கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!


இந்திய அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு நடந்த ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், இரு அணிகளும் டி-20 போட்டியில் மோதின. இந்திய அணி முதலில் பேட் செய்தது. அணியில் தினேஷ் கார்த்தி மற்றும் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டிருந்தனர். கேப்டன் கோலி, தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
தொடக்கம் முதலே இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்தி 48, கோலி 39, பண்ட் 38 ரன்கள் குவித்தனர். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது.

Lewis

இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கெய்ல் 18 ரன்களில் அவுட் ஆனார். ஆனால், இவின் லீவிஸ், சாமூவேல்ஸ் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக, அதிரடியாக ஆடிய லீவிஸ் சதமடித்தார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 62 பந்துகளில் 125 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் 18.3 ஓவர்களிலேயே இலக்கை எளிதில் எட்டியது மேற்கிந்தியத் தீவுகள் அணி. அந்த அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லிவீஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.