இலங்கைத் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி, அங்கு ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது. ஆனால், டி-20 போட்டியில் தோல்வியடைந்தது. இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு, மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாட உள்ளது.

Indian test team


இந்நிலையில், இலங்கைத் தொடருக்கான டெஸ்ட் அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதில், கருண் நாயருக்குப் பதிலாக ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஜெயந்த் யாதவுக்குப் பதிலாக, முகமது சமிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஓய்விலிருந்து கே.எல். ராகுல் அணிக்குத் திரும்பியுள்ளார். குறிப்பாக, ஆல் ரவுண்டராக அசத்திவரும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
 

அணியின் விவரம் வருமாறு: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல். ராகுல், புஜாரா, ரஹானே, ரோஹித் ஷர்மா, அஸ்வின், ஜடேஜா, சஹா (விக்கெட் கீப்பிங்), இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், முகமது சமி, குல்தீப் யாதவ், அபினவ் முகுந்த்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!