Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

பயிற்சியாளர் விவகாரம்: கோலிக்கு கங்குலி அட்வைஸ்!

கேப்டன் கோலியுடனான கருத்து வேறுபாடு காரணமாக, கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். சாம்பியன்ஸ் ட்ராபியுடனேயே கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவதாக இருந்தது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கும், கும்ப்ளேவே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் அதை ஏற்ற கும்ப்ளே, பின்னர் மறுத்துவிட்டார். இதன் காரணமாக, பயிற்சியாளர் இல்லாமலேயே மேற்கிந்தியத் தீவுகள் தொடரை விளையாடியது இந்தியா. இதையடுத்து, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், ரவி சாஸ்திரி, டாம் மூடி உள்ளிட்ட 10 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

Ganguly


இந்நிலையில், இதில் ஆறு பேர் நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய  குழு, அந்த ஆறு பேரிடம் நேற்று நேர் காணல் நடத்தியது. இதையடுத்து, விரைவில் இந்திய அணியின் பயிற்சியாளர் அறிவிக்கப்பட உள்ளார். 


இதனிடையே, நேர்காணல் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கங்குலி, "நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. கேப்டன் கோலியுடன் ஆலோசித்த பிறகு பயிற்சியாளர் யார் என்பதை முடிவுசெய்வோம். இந்திய கிரிக்கெட் அணி, வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் வகையில் பயிற்சியாளர் நியமிக்கப்படுவார். பயிற்சியாளர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதுகுறித்து கோலி புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில், பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதில் தலையிடாமல் இருந்ததற்காக, கோலிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement