விம்பிள்டன் டென்னிஸ்: நடாலுக்கு அதிர்ச்சியளித்த முல்லர்!

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்துவருகிறது. ஃப்ரெஞ்ச் ஓப்பனைக் கைப்பற்றிய உற்சாகத்தில் களமிறங்கிய நடால், முதல் மூன்று சுற்றுகளை வெற்றிகரமாக முடித்தார். இந்நிலையில், நான்காவது சுற்றில் உலகின் 15-வது நிலை வீரரான கில்லஸ் முல்லருடன் நடால் மோதினார்.

Nadal


5 செட்கள் நடந்த இந்தப் போட்டி, சுமார் 4 மணி நேரத்துக்கு நீடித்தது. முதல் இரண்டு செட்களை முல்லர் கைப்பற்றி, கெத்து காட்டினார். ஆனால், அடுத்தடுத்த செட்களில் நடால் கடுமையாகப் போராடினார். மூன்று மற்றும் நான்காவது செட்களை நடால் கைப்பற்ற, ஐந்தாவது சுற்றில் ஆட்டம் அனல் பறந்தது. இருவரும் கடுமையாகப் போராடினர். ஆனாலும் முல்லர் கடைசி செட்டை கைப்பற்றினார்.


இதனால், 6-3, 6-4, 3-6, 4-6, 15-13 செட் கணக்குகளில் வெற்றிபெற்று, நடாலுக்கு அதிர்ச்சியளித்தார் முல்லர். கடந்த 2011-க்குப் பிறகு, விம்பிள்டன் காலிறுதிச் சுற்றுக்கு முன்பே நடால் வெளியேறுவது, இது ஐந்தாவது முறையாகும். இதனால், நடாலின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


தோல்விகுறித்து நடால், "இது எனக்கு சிறந்த போட்டியில்லை. முல்லர் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக, கடைசி செட்டில் அவர் அற்புதமாக விளையாடினார். ஆனால், நான் கடைசி வரை போராடினேன்" என்றார். 

வெற்றிபெற்ற முல்லர் கூறுகையில், "இது ஒரு நீண்ட போட்டி. முதல் இரண்டு செட்களில் நான் நடாலைவிட சிறப்பாகச் செயல்பட்டேன். ஆனாலும், நீண்ட போராட்டத்துக்குப் பிறகே வெற்றிபெற்றுள்ளேன்" என்று கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!