விம்பிள்டன் டென்னிஸ்: ஃபெடரர் வெற்றி, சானியா தோல்வி

 காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஃபெடரர்  வெற்றிபெற்றார். இந்தியாவின் சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிரிவில் தோல்வியடைந்து வெளியேறினார்.


உலகின் பழைமையான கிராண்ட் ஸ்லாம்  போட்டியான விம்பிள்டன் டென்னில் போட்டிகள், பிரிட்டனின் தலைநகர் லண்டனில் நடந்து வருகின்றன. 131-வது விம்பிள்டன் தொடரில் நேற்று, ஆண்கள் ஒற்றையரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் நடந்தன. 

உலகின் முன்னணி வீரரும் புல்தரை நாயகனுமாகிய ஃபெடரர்  டிமிட்ரோவை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில், ஃபெடரர் 6-4,6-2,6-4 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் நடால்,முல்லரிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். 

மற்ற போட்டிகளில், முன்னணி வீரர்களான முர்ரே, பெர்டிச்,ரோனிக் ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினர். உலகின் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச், இன்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடுகிறார். 

பெண்கள் ஒற்றையரில், ஹெலப், முகரூசா, வீனஸ் வில்லியம்ஸ் போன்ற முன்னணி வீராங்கனைகள் காலிறுதிக்குத் தகுதிபெற்றனர். 

பெண்கள் இரட்டையர் போட்டியில், இந்திய வீராங்கனை சானியா மிர்சா இணை, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார். கலப்பு இரட்டையரில், இந்தியாவின் ராஜா இணை தோல்வி அடைந்தது. மற்றொரு கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்சா இன்று தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடுகிறார். விம்பிள்டன் தொடரில் தற்போது, மீதமிருக்கும் ஒரே இந்தியர் சானியா மிர்சாதான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!