ரவி சாஸ்திரி பயிற்சியாளர்... ஜாகீர் கான் பந்து வீச்சு பயிற்சியாளர்... பி.சி.சி.ஐ அறிவிப்பு!

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Ravi Shastri


கேப்டன் கோலியுடனான கருத்து வேறுபாடு காரணமாக, கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். சாம்பியன்ஸ் ட்ராபியுடனேயே கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவதாக இருந்தது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கும், கும்ப்ளேவே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் அதை ஏற்ற கும்ப்ளே, பின்னர் மறுத்துவிட்டார். இதன் காரணமாக, பயிற்சியாளர் இல்லாமலேயே மேற்கிந்தியத் தீவுகள் தொடரை விளையாடியது இந்தியா. இதையடுத்து, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், ரவி சாஸ்திரி, டாம் மூடி உள்ளிட்ட 10 பேர் விண்ணப்பித்திருந்தனர்.


இந்நிலையில், இதில் ஆறு பேர் நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய  குழு, அந்த ஆறு பேரிடம் நேற்று நேர் காணல் நடத்தியது. 


இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பி.சி.சி.ஐ-யின் தற்காலிகத் தலைவர் சி.கே. கண்ணா வெளியிட்டுள்ளார். அதேபோல இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இவருவரும் வருகின்ற 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை வரை இந்தப் பதவியில் இருப்பர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!