Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

வெற்றிப்பாதைக்குத் திரும்புமா இந்திய மகளிர் அணி?: இன்று ஆஸ்திரேலியாவுடன் மோதல்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட், இங்கிலாந்தில் நடந்துவருகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில், இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது இந்திய அணி. அதேபோல பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய அணிகளையும் வீழ்த்தியது. ஆனால், கடைசியாக நடந்த போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்திருந்தது. 

Indian women Cricket


இந்நிலையில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாகும். இந்திய அணி, புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தாலும், மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. குறிப்பாக, அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற இன்றைய போட்டியில் வெற்றிபெறுவது அவசியமாகும். ஆஸ்திரேலிய அணி, புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 


இதனால், இன்றைய போட்டி இந்தியாவுக்கு முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "மீண்டும் ஒரு கடினமான போட்டிக்குத் தயாராகிவருகிறோம். இன்றைய போட்டியின்மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கூறியுள்ளார். 


மித்தாலி ராஜ், ஸ்மிரிதி மந்தனா, தீப்தி ஷர்மா, பூனம் ரவுத் என்ற இந்திய அணியின் பேட்டிங் வலுவாகவே உள்ளது. அதேபோல கோஸ்வாமி, பூனம் யாதவ் என்று பெளலிங்கும் இந்திய அணிக்கு வலுவாகவே உள்ளது. இவை இரண்டும் க்ளிக்கானால், இந்திய அணி வெற்றிப்பாதைக்குத் திரும்புவது உறுதி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement