ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

விறுவிறுப்பான கட்டத்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள்!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் இன்று, ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கு காலிறுதிச் சுற்றுகள் நடைபெறகின்றன.

Wimbledon tennis logo


உலகின் பழைமையான கிராண்ட் ஸ்லாம்  போட்டியான விம்பிள்டன் டென்னில் போட்டிகள், பிரிட்டனின் தலைநகர் லண்டனில் நடந்து வருகின்றன. 131-வது விம்பிள்டன் தொடரில் நேற்று, ஆண்கள் ஒற்றையரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், மீதம் இருந்த ஒரு ஆட்டம் நடைபெற்றது. அதில், முன்னணி வீரரான ஜோகோவிச் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

தற்போது, விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில், நடாலுக்கு அதிர்ச்சியளித்த முல்லர், இன்று சிலிக்கை சந்திக்கிறார். உலகின் முதல் நிலை வீரரான முர்ரே, குயிர்ரேவை சந்திக்கிறார். மற்ற இரு போட்டிகளில் ஃபெடரர், ரோநிக்கையும் ஜோகோவிச், பெர்டிச்சையும் எதிர்கொள்கிறார்கள். 

பெண்கள் ஒற்றையரில் நேற்று, காலிறுதிப் போட்டிகள் நடந்தன. இதில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹெலப், அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.  மற்ற போட்டிகளில், முன்னணி வீராங்கனைகள் வீனஸ் வில்லியம்ஸ், முகரூசா முதலியோர் வெற்றிபெற்றனர். பெண்களுக்கான ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெறும். 

கலப்பு  இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா  மிர்சா - டொடிக் இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இன்று விளையாடுகிறது. அதே போல இந்தியாவின் ரோகன் போபண்ணா இணையும் தனது காலிறுதிக்கு முந்தய சுற்றில்  விளையாடுகிறது. 
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!