மேத்யூஸ் விலகல்; இலங்கையின் புதிய கேப்டன்கள் அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் விலகியதை அடுத்து, அந்த அணியின் புதிய கேப்டன்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

tharanga and chandimal


ஜிம்பாப்வே அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒருநாள் தொடரை 3-2 என்ற வித்தியாசத்தில் கைப்பற்றியது. இலங்கை அணியின் இந்தத் தோல்விக்கு, கேப்டன் என்ற முறையில் பொறுப்பேற்று, கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் மேத்யூஸ், 2013 முதல் இலங்கை அணிக்கு கேப்டனாக இருந்தார்.

மேத்யூஸ் பதவி விலகலால், அடுத்து தொடங்க இருக்கும் இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு முன்பாக, புதிய கேப்டனைத் தேர்வு செய்யவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்நிலையில், இலங்கை அணி நிர்வாகம் அந்த அணிக்கான புதிய கேப்டன்களை இன்று அறிவித்தது. 

இலங்கை அணியின் டெஸ்ட் அணிக்கு தினேஷ் சண்டிமலும், ஒருநாள் மற்றும் டி-20 அணிகளுக்கு உபுல் தரங்காவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த சண்டிமல், "இந்த புதிய பணிக்கு என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றி. கேப்டன் பதவி என்பது எளிதல்ல. ஏஞ்சலோ மேத்யூஸ் எங்களுக்கு மேட்ச் வின்னராக திகழ்ந்தவர். வரும் காலங்களில் அவர் மிகப்பெரும் பங்களிப்பை  அணிக்குச் செய்வார் என நம்புகிறேன் " என்றார். 

இந்திய அணி, வரும் 21-ம் தேதி முதல் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!