ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்... வரலாற்றுச் சாதனை புரிந்த மித்தாலி ராஜ்!

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், பெண்கள் ஒருநாள் போட்டிகள் வரலாற்றிலேயே அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையை புரிந்தார். 

மித்தாலி ராஜ்

தனது 16-வது வயதில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமான மித்தாலி ராஜ், தான் பங்கேற்ற முதல் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். தனது 19-வது வயதில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 214 ரன்கள் விளாசி, டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். பின்னர் இந்த சாதனை பாகிஸ்தான் வீராங்கனையால் முறியடிக்கப்பட்டது. இப்படி தன் கிரிக்கெட் விளையாட்டு வாழ்க்கை முழுவதும் சாதனை நாயகியாக திகழ்ந்த மித்தாலி, இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 34 ரன்களை எட்டியபோது, பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீராங்கனை என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தினார். அதேபோல, பெண்கள் கிரிக்கெட்டில் முதன்முறையாக 6,000 ரன்கள் கடந்தவர் என்ற பெயரையும் அவர் இன்று பெற்றார். முன்னர் இங்கிலாந்து அணியின் சார்லோட் எட்வார்ட்ஸ் 5,992 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் பேட்டிங் செய்து வருகிறது இந்திய அணி. மித்தாலி ராஜ், அரை சதத்தைக் கடந்து, தொடர்ந்து களத்தில் விளையாடி வருகிறார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!