'இதுதான் சாம்பியன் அடி...' : மித்தாலி ராஜை புகழ்ந்துதள்ளும் சச்சின், கோலி!

 

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. இதில், நேற்று நடந்த போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில், இந்திய அணி தோல்வியடைந்தது. ஆனால், ஒரு நாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை மித்தாலி ராஜ் படைத்துள்ளார். 

Mithali Raj


ஏற்கெனவே, மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து ஏழு முறை அரை சதம் அடித்த ஒரே வீராங்கனை என்ற சாதனையை மித்தாலி ராஜ் அண்மையில் படைத்தார். இந்நிலையில், மித்தாலி ராஜின் புதிய சாதனைக்குப் பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தபோதும், மித்தாலி ராஜின் சாதனையே சமூக வலைதளங்களில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.


இதனிடையே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சச்சின், கோலி, கம்பீர், வி.வி.எஸ். லட்சுமணன், ரஹானே உள்ளிட்ட வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


இதுகுறித்து சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில்," வாழ்த்துகள். இது ஒரு மிகப்பெரிய சாதனை. முக்கியமாக, இன்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள்" எனக் கூறியுள்ளார்.

கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வாழ்த்துகள் ரன் மிஷின். உண்மையான சாம்பியன்" எனக் கூறியுள்ளார்.

கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய கிரிக்கெட்டுக்கு இது மிகவும் சிறப்பான தருணம். சாம்பியன் ஸ்டஃப்" எனக் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!