வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (14/07/2017)

கடைசி தொடர்பு:16:49 (14/07/2017)

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்: டுபிளசிஸ் உள்ளே, டுமினி வெளியே

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயென இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரென்ட்பிரிட்ஜில் தற்போது தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டுபிளசிஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். முன்னதாகக் கடந்த ஜூலை ஆறாம் தேதி நடந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இரண்டாவதாக பேட் பிடித்துத் தோற்றது. இதைக் கவனத்தில் கொண்டு முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டுபிளசிஸ் .

கடந்த போட்டியில் விளையாடிய டுமினி, டீ ப்ரூன், ககிசோ ரபாடா ஆகியோர் இந்த டெஸ்டில் இல்லை. ஐசிசி ரபாடாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதித்துள்ளதால் அவர் இந்தப் போட்டியில் இடம்பெறவில்லை. இவர்களுக்குப் பதிலாக கிறிஸ் மோரிஸ், ஃபாப் டு பிளசிஸ், டுவேன் ஆலிவர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டீன் எல்கருடன் இன்னிங்சை தொடங்குகிறார் ஹெயினோ குன்.  

 ஃபாப் டுபிளசிஸ்

இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டிரென்ட் பிரிட்ஜ் மைதானம் வேகப்பந்துக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை இங்கிலாந்து இங்கே விளையாடியபோது ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. அப்போது ஸ்டூவர்ட் பிராட் பந்தில் அடங்கியது ஆஸி. பிராட் 15 ரன்கள் கொடுத்து எட்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த முறை தென்னாப்ரிக்காவை பிராட் மிரட்டுவாரா என்பதைப் பார்க்க இங்கிலாந்து ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். 

பிளெயிங் லெவன் :- 

இங்கிலாந்து :-

அலிஸ்டர் குக், கீட்டன் ஜென்னிங்ஸ், கேரி பேலன்ஸ், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, லியம் டாவ்சன், ஸ்டூவர்ட் பிராட், மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் . 

தென் ஆப்பிரிக்கா :.- 

டீன் எல்கர், ஹெயினோ குன், ஹாஷிம் ஆம்லா, ஃபாப் டு பிளசிஸ், தெம்பா பவுமா, குயின்டன் டீ காக் (விக்கெட் கீப்பர்) , கிறிஸ் மோரிஸ், வெர்னோன் பிலாந்தர், கேஷவ் மகராஜ், மோர்னே மோர்கல், டுவேன் ஆலிவர்.