வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (14/07/2017)

கடைசி தொடர்பு:18:01 (14/07/2017)

வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி!

இன்று நியூசிலாந்திற்கு எதிரானப் போட்டியில் விளையாடும் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி, கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் களம் இறங்கவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து என எட்டு அணிகள் இதில் கலந்துகொண்டுள்ளன. இந்தத் தொடரில், தற்போதைய நிலையில் அனைத்து அணிகளும் ஆறு போட்டிகளை விளையாடி முடித்திருக்கின்றன. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. 

இன்று நடக்கும் போட்டியில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்தியா, ஐந்தாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. இந்தியாவைவிட ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கி இருக்கிறது நியூசிலாந்து. ஆகவே, இந்தியா - நியூசிலாந்து மோதும் போட்டி மறைமுக கால் இறுதிப் போட்டியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் தோற்றால், இந்திய மகளிர் அணி மூட்டையைக் கட்டவேண்டிய நெருக்கடியான நிலையில் உள்ளது. 

தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளைப் பெற்ற இந்திய அணி, கடைசி இரண்டு போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவிடமும் ஆஸ்திரேலியாவிடமும் சரணடைந்தது. நியூசிலாந்தும் வெல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்தியாவுக்கும் அதே நிலைமைதான். இதனால் இன்று நடக்கும் போட்டியின் முடிவைப் பொறுத்து இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உள்ளதா என்பது தெரிந்துவிடும்.