Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

'கேப்டனோ இல்லையோ என் வேலையைக் கச்சிதமாக செய்வேன்!'- ரஹானே ஓபன் டாக்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே. ஆனால் அவர் சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாட முடியாத சூழல் இருந்தது. ஆனால், சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகான மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் இருப்பதிலேயே அதிகபட்ச ஸ்கோர் அடித்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். 

ரஹானே

தன் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ரஹானே, 'நான்தான் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தற்போதைய துணை கேப்டன். அதனால், எனக்கு ஒருநாள் போட்டிகளில் 12-வது ப்ளேயராக நியமிக்கப்பட்டால் அதற்கான வேலைகளைச் செய்யமாட்டேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். அதையும் செவ்வனவே செய்வேன். உங்கள் நாட்டுக்காக நீங்கள் விளையாடும் போது என்ன வேலை கொடுத்தாலும் செய்ய வேண்டும். அதில் எனக்கு எந்த வித ஈகோவும் கிடையாது. எனக்கு அப்படித்தான் நடந்து கொள்ளத் தெரியும்' என்றவர்,

சமீபத்தில் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடிய ஒரு நாள் தொடர் குறித்து, 'மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் என்னளவில் மிகவும் முக்கியமானது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை இந்தத் தொடரில் நான் வெளிப்படுத்தியதுதான் சிறப்பு. எனது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வாழ்க்கைக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாக இருக்கும்' என்று முடித்துக் கொண்டார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement