'ரன் குவிப்பதில் கொலப்பசி...': இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜ்!

அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு, வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டத்தில், நியூஸிலாந்துடன் மோதிய இந்திய மகளிர் அணி, அதில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி, கேப்டன் மித்தாலி ராஜின் பொறுப்பான ஆட்டத்தினால் 265 ரன்கள் குவித்தது. 

மித்தாலி ராஜ்


குறிப்பாக, மித்தாலி 109 ரன்கள் குவித்தார். இதையடுத்து, களமிறங்கிய நியூஸிலாந்து அணியை 79 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து, வீட்டுக்கு அனுப்பியது இந்திய அணி. இதன் மூலம், அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, அங்கு பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது.

இதனிடையே, வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மித்தாலி ராஜ், "எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அணியில் சிலருக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பை. எனவே, அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்பதுதான் எங்களின் முதல் இலக்கு. நாட்டுக்காக, ரன் எடுப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று.

ரன் எடுப்பதுதான் என்னுடைய கனவு. ஏனென்றால் ரன் குவிப்பதில் என்னுடைய பசி எப்போதும் அடங்காது. பௌலர்களும் சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி எளிதானது. கடந்த சில போட்டிகளில் ஏற்பட்ட தோல்வியால் நாங்கள் வருந்தவில்லை. எனது வாழ்க்கையிலேயே இதுதான் எனது சிறந்த ஆட்டம்" என்றார் மித்தாலி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!