வெளியிடப்பட்ட நேரம்: 20:42 (16/07/2017)

கடைசி தொடர்பு:21:31 (16/07/2017)

மரின் சிலிச்சை வீழ்த்தி 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்.!


விம்பிள்டன் டென்னிஸில் 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ரோஜர் பெடரர் சாதனை படைத்துள்ளார். அவர், ஒரு செட் கூட இழக்காமல் குரேஷிய வீரர் மரின் சிலிச்சை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார். சுவிட்சர்லாந்தைச் ரோஜர் ஃபெடரரும், குரேஷியாவைச் சேர்ந்த மரின் சிலிச்சும் இறுதியைப் போட்டியை எதிர்கொண்டனர். போட்டியின் தொடக்கம் முதலே ரோஜர் ஃபெடரர் ஆதிக்கம் செலுத்தினார். அவர், 6-3, 6-1, 6-4 என்ற நேர்செட்களில் வென்றார். அவர் ஒரு செட் கூட இழக்காமல் இந்தப் பட்டத்தை வென்றுள்ளார். இதன்மூலம் விம்பிள்டன் போட்டியில் ஒற்றையரில் 8 பட்டங்கள் வென்று, அதிக பட்டங்கள் வென்ற வீரர் என்ற சாதனையை ஃபெடரர் படைத்துள்ளார். இதுதவிர, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஃபெடரர் வெல்லும் 19-வது சாம்பியன் பட்டம் இதுவாகும். மேலும், விம்பிள்டன் தொடரில் 2012-ம் ஆண்டுக்குப் பின்னர் ஃபெடரர் பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.