வெளியிடப்பட்ட நேரம்: 09:17 (18/07/2017)

கடைசி தொடர்பு:11:18 (18/07/2017)

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்: இந்தியாவுக்கு 2 வது பதக்கம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கமாக வெள்ளிப் பதக்கத்தை வென்றளித்துள்ளார் அமித்குமார்.

அமித்குமார்

இங்கிலாந்தில் லண்டன் மாநகரில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 8 வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. ஜூலை 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையில் நடைபெறும் இப்போட்டிகளில் உலகின் பல்வேறு நாட்டின் வீரர்களும் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றனர். இப்போட்டித் தொடரில், ஆண்களுக்கான கிளப் த்ரோ போட்டியில், இந்தியாவின் சார்பில் அமித்குமார் சஹோரா பங்கேற்றார். 

இதில், அமித்குமார் ‘கிளப் த்ரோ’ போட்டியில் 30.25 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இது இந்தியாவுக்குக் கிடைத்த இரண்டாவது பதக்கமாகும். முன்னதாக, இந்தப் போட்டித் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் சுந்தர் கஜ்ஜார் தங்கம் வென்று, இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெற்று வரும் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கப் பட்டியலில் முன்னணியில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.