வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (18/07/2017)

கடைசி தொடர்பு:21:20 (18/07/2017)

அப்போது சமி... இப்போது பதான்...: போட்டோ போட்டதற்கு கண்டனம்!

இர்ஃபான் பதான், தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டதற்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. 


இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான், தனது மனைவி சாரா பைஜ்ஜுடன் இருக்கும் புகைப்படத்தை, நேற்று ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவருடைய அந்தப் பதிவிற்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டிருப்பது இஸ்லாமுக்கு எதிரானது. அவருடைய கைகள் வெளியே தெரிகின்றன. அவர், கைகளில் நெய்ல் பாலிஷ் போட்டுள்ளார் என்பது போன்ற கமென்ட்டுகள் பதிவிடப்பட்டுள்ளன. ஃபேஸ்புக்கில் அந்தப் புகைப்படத்தின் கீழே இர்ஃபான் பதானுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஏராளமான கமென்ட்டுகள் பதிவாகியுள்ளன.

ஏற்கெனவே, இதேபோல இந்தியப் பந்துவீச்சாளர் முகமது சமி, தன்னுடைய மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கும் இந்தச் செயல் இஸ்லாமுக்கு எதிரானது என்று சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.