ஆசிய ஜூடோ சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு வெண்கலம்!

ஆசிய அளவில் நடைபெற்றுவரும் ஜூனியர்களுக்கான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்திய அணி மூன்று பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஜூடோ போட்டிகள்

கிர்கிஸ்தானில், ஆசிய ஜூனியர் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், இந்திய அணியைச் சேர்ந்த மூன்று பெண்கள், மூன்று வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ப்ரீத்தி 44 கிலோ எடைப் பிரிவிலும், 52 கிலோ எடைப் பிரிவில் டெல்லியைச் சேர்ந்த பிங்கி பல்ஹாராவும், 78 கிலோ எடைப் பிரிவில் டெல்லியின் துலிகா மானும் பங்கேற்றனர். 

முதல் சுற்றில், தைபே நாட்டின் சாய்-சீ-சோ-விடமும் இரண்டாவது சுற்றில், உஸ்பெகிஸ்தானின் குல்னூரிடமும் தோற்ற ப்ரீத்தி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மக்கா நாட்டின் செங் லீ-யை வீழ்த்தி பதக்கத்தைக் கைப்பற்றினார். இதேபோல, மற்ற இரு வீராங்கனைகளான பிங்கி பல்ஹாராவும் துலிகா மானும் முதல் இரண்டு சுற்றுகளிலும் வீழ்ந்தனர். வெண்கலப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டியிலேயே வென்று பதக்கத்தைக் கைப்பற்றினர். இதன்மூலம், இந்திய அணி, ஜூடோ சாம்பியன்ஷிப்பில் மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் நிறைவுசெய்தது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!