வெளியிடப்பட்ட நேரம்: 21:33 (20/07/2017)

கடைசி தொடர்பு:21:33 (20/07/2017)

ஹர்மன்ப்ரீத் கவுர் ருத்ரதாண்டவம்... அரையிறுதியில் 281 ரன்கள் குவித்தது இந்திய மகளிர் அணி!

மகளிர் உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன. மழைக் காரணமாக இந்தப் போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, டாஸ்  வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணிக்கு சிறந்த தொடக்கம் கிடைக்கவில்லை.

ஹர்மன்ப்ரீத் கவுர்


ஆனால், கேப்டன் மித்தாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கவுர் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். மித்தாலி 36 ரன்களில் வெளியேற, ஹர்மன்ப்ரீத் ருத்ரதாண்டவம் ஆடினார். சிறப்பாக ஆடிய அவர் சதம் அடித்தார். குறிப்பாக சதமடித்தப் பிறகு அவர் தனது வேகத்தை டாப் கியருக்கு மாற்றினார். இதனால், பந்துகளை மைதானத்தின் நாலாப் பக்கமும் சிதறடித்தார். 


ஹர்மன்ப்ரீத் 115 பந்துகளில் 171 ரன்கள் விளாசினார். அவரது இன்னிங்ஸில் 7 சிக்ஸர்களும், 20 ஃபோர்களும் அடக்கம். இதனால், இந்திய அணி 42 ஓவர்கள் முடிவில் 281 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமாக இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது. 


இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதும்.