வெளியிடப்பட்ட நேரம்: 06:24 (21/07/2017)

கடைசி தொடர்பு:08:12 (21/07/2017)

அரையிறுதி வெற்றிக்குப் பின்னர் மித்தாலி ராஜ் சொன்னது இதுதான்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அசத்தல் வெற்றிபெற்று, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில், ஹர்மன்ப்ரீத் கௌர் பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் (171) எடுத்து சாதனை படைத்தார். மேலும் இந்திய அணி, பல முறை கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியிலேயே வீட்டுக்கு அனுப்பி கெத்தாக ஃபைனலில் நுழைந்துள்ளது. 

மித்தாலி ராஜ்

இந்நிலையில், அரையிறுதி வெற்றிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'தற்போது, இந்திய அணியில் சர்வதேச தரத்துக்கான பல வீராங்கனைகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு போட்டியிலும் புதிதாக ஒருவர் ஜொலிக்கிறார். இந்தத் தடவை ஹர்மன் முறை. அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஓர் அரையிறுதிப் போட்டியில் அப்படியோர் ஆட்டம், ஆகச் சிறந்தது' என்று ஹர்மன்ப்ரீத் கௌருக்குப் புகழாரம் சூட்டினார். 

ஹர்மன்ப்ரீத் கௌர்

வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கப்போகும் இறுதிப் போட்டியில் மட்டும் இங்கிலாந்து அணியை வெற்றிபெற்றுவிட்டால், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் கைகளில் முதன்முறையாகக் உலகக் கோப்பை தவழும்.