விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மேட்ச் ஃபிக்ஸிங்? அதிர்ச்சியில் விளையாட்டு உலகம்

டென்னிஸ் போட்டிகளில் விம்பிள்டன் போட்டிகள் மிகவும் பிரபலம். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டியில், தற்போது மேட்ச் ஃபிக்ஸிங் நடந்துள்ளதாகப் புகார்கள் வந்துள்ளன.

விம்பிள்டன்


கடந்த வாரம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் முடிவடைந்தன. டென்னிஸ் உலகில் அதிக கௌரவமான  இந்தத் தொடரில், ஃபிக்ஸிங் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தப் போட்டியில் மட்டுமல்லாமல், ஃப்ரெஞ்சு ஓப்பன் தொடரிலும் இதே போன்று  மேட்ச் ஃபிக்ஸிங் நடந்துள்ளதாக, டென்னிஸ் ஒருங்கிணைந்த பிரிவான டிஐயு-வுக்கு புகார்கள் வந்துள்ளன. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும்  53 புகார்கள்  வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்தப் புகார்கள்குறித்த விசாரணை, மிக விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த விம்பிள்டன் தொடரைப் பொறுத்த வரை  மிக முக்கியப் போட்டி ஒன்றிலும் மேட்ச் ஃபிக்ஸிங்  நடந்துள்ளதாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம், தற்போது விளையாட்டு உலகத்தில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!