உலகத் தடகள சாம்பியன்ஷிப் வாய்ப்பை இழந்த மன்ப்ரீத் கவுர்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை மன்ப்ரீத் கவுர், ஊக்கமருந்து சோதனையில் சிக்கி உள்ளார். 

Manpreet kaur

ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், இந்த மாதம் புவனேஷ்வரில் நடைபெற்றது. இதில், முதன் முறையாக இந்தியா, சீனாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றி வரலாற்றில் இடம்பிடித்தது. இந்தத் தொடரில், குண்டு எறிதலில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்தார், மன்ப்ரீத் கவுர். 

ஆனால், அவர் தற்போது ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். முதல்கட்ட சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, அவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட சிறுநீர் மாதிரியைப் பரிசோதனை செய்ததில், அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனால், அவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தடகள சம்மேளனத் தலைவர் அடிலே சுமரிவாலா தெரிவித்தார். 
ஆசியத் தடகளப் போட்டியில் தங்கம் வென்றதால், லண்டனில் அடுத்த மாதம் நடக்கும் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற்றிருந்தார் மன்ப்ரீத் கவுர். தற்போது அந்த அணியிலிருந்தும் கவுர் நீக்கப்பட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!