Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ்நாடு பிரீமீயர் லீக் தொடக்க விழாவில் தோனி பங்கேற்பு!

மிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. தொடக்க விழாவில் தோனி பங்கேற்கிறார். 

தமிழ்நாடு பிரீமியர் லீக் தோனி தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நாளை (22-ம் தேதி) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியுடன் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி மோதுகிறது. இரவு 7.15 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கும். முன்னதாக நடைபெறவுள்ள தொடக்க விழாவில், தோனி, மோகித் சர்மா, பவான் நெகி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மாலை 6 மணியளவில் தோனி, ஹேடன் மைதானத்தில் சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். 

நடப்புத் தொடரில்  தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்கின்றன. இரு தகுதிச் சுற்று ஆட்டங்கள், ஒரு எலிமினேட்டர் சுற்று ஆட்டம் நடைபெறுகிறது. திண்டுக்கல் நத்தத்தில் 25-ம் தேதி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. இந்த மைதானத்தில் 11 ஆட்டங்களும் நெல்லை இந்தியா சிமென்ட் வளாக மைதானத்தில் 12 ஆட்டங்களும் மீதி போட்டிகள் சென்னையிலும் நடைபெறுகின்றன. இறுதியாட்டம் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறுகிறது.

தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ், லைக்கா கோவை கிங்ஸ், மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், காரைக்குடி காளை, ரூபி திருச்சி வாரியார்ஸ், திண்டுக்கல் ட்ராகன்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

நீங்கள் கீழே விழுபவரா, கெட்டியாகப் பற்றிக்கொள்பவரா? - பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை! #MotivationStory
Advertisement

MUST READ

Advertisement