இறுதிப் போட்டியில் என்ன ஸ்பெஷல்? இந்தியா - இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை #WomensWorldCup

மகளிர் உலககோப்பை போட்டிகள் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 

Indian Women's team

அரையிறுதியில் இந்திய அணி பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது முதலே பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இறுதிப் போட்டிக்கு நுழைந்ததுக்கே இந்திய அணிக்குப் பரிசுத் தொகை அறிவிக்கப்படும் என்று அறிவித்தது பி.சி.சி.ஐ. 

இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வைத்து நடை பெறுகிறது. பொதுவாகவே மகளிர் கிரிக்கெட் போட்டிகள் ஆண்கள் கிரிக்கெட் ஆடும் பெரிய மைதானங்களில் நடப்பதில்லை. இந்த முறையும் அரையிறுதி ஆட்டங்கள் வரை, இங்கிலாந்தில் உள்ளூர் போட்டியான கவுண்டி கிரிக்கெட் நடைபெறும் மைதானங்களில்தான் நடைபெற்றது. தற்போது இறுதிப் போட்டியானது புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடப்பது ஸ்பெஷல்தான்.

இந்திய அணியில் மூத்த வீராங்கனைகள், கேப்டன் மித்தாலி ராஜ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஜூலான் கோஸ்வாமிதான். மித்தாலி ராஜி மகளிர் கிரிக்கெட் உலகில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை. ஜூலான் கோஸ்வாமி மகளிர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீத்திய  பந்துவீச்சாளர். இந்த இரு வீராங்கனைகளுக்கும், இது கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம். 

1973 முதல் நடந்து வரும் மகளிர் உலகக் கோப்பையில், இதுவரை ஆஸ்திரேலியா ஆறு முறையும் இங்கிலாந்து மூன்று முறையும், நியூசிலாந்து ஒரு முறையும் கோப்பையைக் கைப்பற்றி உள்ளது. இந்த முறை இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றினால் இந்தியா வெல்லும் முதல் மகளிர் உலகக் கோப்பையாக அது அமையும். அதோடு மகளிர் உலகக் கோப்பையைக் கைப்பற்றும் முதல் ஆசிய அணி என்ற பெருமையும் வந்து சேரும். 

இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னால் கடந்த 2005-ல், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகத் தோல்வி அடைந்தது. இந்தத் தொடரில் பல மகத்தான சாதனைகளைச் செய்த இந்திய அணி, கோப்பையை வெல்வார்களா எனபது நாளை தெரிந்துவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!