மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை: வீராங்கனைகளுக்குத் தலா ரூ.50 லட்சம் பரிசு!

மகளிர் உலகக் கோப்பைப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அரையிறுதியில் இந்திய அணி பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது முதலே பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இறுதிப் போட்டிக்கு நுழைந்ததுக்கே இந்திய அணிக்குப் பரிசுத் தொகை அறிவிக்கப்படும் என்று அறிவித்தது பி.சி.சி.ஐ. 

இந்நிலையில் முன்னர் அறிவித்ததுபோல் பி.சி.சி.ஐ இந்திய மகளிர் கிரிகெட் அணிக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது. இதன்படி இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீராங்கனைக்கும் ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என பி.சி.சி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், அணியில் உள்ள ஒவ்வோர் இதர நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீராங்கனைகள் சிறப்பாக விளையாடியதுக்காக இப்பரிசு அறிவிக்கப்பட்டதாக பி.சி.சி.ஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!