உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கமாக வெண்கலப் பதக்கத்தை வென்றளித்துள்ளார் கரம்ஜோதி தலால்.

பாரா தடகள் சாம்பியன்ஷிப்

இங்கிலாந்தில் லண்டன் மாநகரில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 8 வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. ஜூலை 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையில் நடைபெறும் இப்போட்டிகளில் உலகின் பல்வேறு நாட்டின் வீரர்களும் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றனர். இப்போட்டித் தொடரில், பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில், இந்தியாவின் சார்பில் கரம்ஜோதி தலால் பங்கேற்றார். 

உலகத் தரவரிசையில் 8 வது இடத்தில் உள்ள கரம்ஜோதி தலால், இப்போட்டியில் 19.02 தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்தப் போட்டித் தொடரில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்கள் வென்றுள்ளது. இந்த சாம்பியன்ஷிப் தொடரில் 54 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 42 பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், மூன்று பதக்கங்களுடன் இந்தியா 30 வது இடத்திலும் உள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!