வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (22/07/2017)

கடைசி தொடர்பு:18:43 (22/07/2017)

சி.எஸ்.கே ஜெர்ஸியுடன் சேப்பாக்கத்தில் களமிறங்கிய தல தோனி!

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியுடன் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி மோதுகிறது. முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில், தோனி, மோகித் சர்மா, பவான் நெகி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தோனி
 

குறிப்பாக தோனி சி.எஸ்.கே ஜெர்ஸியில் களமிறங்கினார். அவரது ஜெர்ஸியில் 'தல' என்று எழுதப்பட்டிருந்ததது. தோனி களமிறங்கியதும் ரசிகர்களின் ஆரவாரத்தில் சேப்பாக்கம் மைதானம் அதிர்ந்தது. 

தோனி


நடப்புத் தொடரில்  தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்கின்றன. இரு தகுதிச் சுற்று ஆட்டங்கள், ஒரு எலிமினேட்டர் சுற்று ஆட்டம் நடைபெறுகிறது. திண்டுக்கல் நத்தத்தில் 25-ம் தேதி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. இந்த மைதானத்தில் 11 ஆட்டங்களும் நெல்லை இந்தியா சிமென்ட் வளாக மைதானத்தில் 12 ஆட்டங்களும் மீதி போட்டிகள் சென்னையிலும் நடைபெறுகின்றன. இறுதியாட்டம் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறுகிறது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ், லைக்கா கோவை கிங்ஸ், மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், காரைக்குடி காளை, ரூபி திருச்சி வாரியார்ஸ், திண்டுக்கல் ட்ராகன்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.