'2011 வெற்றியை விட பெரிதாக இருக்கும்!'- இந்திய மகளிர் கிரிக்கெட் அணி குறித்து சிலாகிக்கும் கம்பீர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் இன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடக்க உள்ளது. 

கவுதம் கம்பீர்

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா, இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவது இது இரண்டாவது முறை. இதுவரை உலகக் கோப்பையைக் கைப்பற்றவில்லை என்றாலும் பலமான அணியுடன் இங்கிலாந்தை இறுதிச் சுற்றில் எதிர்கொள்வதால், இந்திய அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக தென்படுகிறது. இதையொட்டி பல கிரிக்கெட் பிரபலங்களும் 'இந்தியாதான் கோப்பையை வெல்லும்' என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கௌதம் கம்பீர், 'இந்திய மகளிர் அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருப்பது பல பெண்களுக்கு ஊக்கம் அளித்து உள்ளது. அவர்கள், வரலாறு படைப்பதற்கு இன்னும் ஒரேயொரு அடியைத்தான் கடக்கவேண்டி உள்ளது. அவர்கள், உலகக் கோப்பையை வெற்றி பெறும் பட்சத்தில், அவர்களின் வெற்றி 2011-ம் ஆண்டு ஆண்கள் கிரிக்கெட் அணி பெற்ற வெற்றியைவிட பெரிதாக இருக்கும். ஏனென்றால் அப்போது, சொந்த நாட்டில் விளையாடியதால் நாங்கள்தான் கோப்பையை வெற்றி பெறுவோம் என யூகிக்கப்பட்டது' என்று கூறியுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!