'கோப்பையுடன் வாங்க கேர்ள்ஸ்': மகளிர் அணியை வாழ்த்திய மோடி!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நீண்ட வருடங்களுக்குப்பிறகு இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக, அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதால், இந்தியா மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்திய மகளிர் அணி


உலகக் கோப்பை லீக் சுற்றில் நடந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி, இந்தியாவிடம் தோல்வியடைந்திருந்தது. இதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, கோப்பையைக் கைப்பற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் வரை மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், உலகக் கோப்பையில் வெற்றி பெற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற, நமது 125 கோடி மக்களுடன் இணைந்து வாழ்த்து தெரிவிக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


மேலும், கேப்டன் மித்தாலி ராஜ் தொடங்கி இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீராங்கனைகளின் தனிச் சிறப்புகளைக் கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார் மோடி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!