அடுத்த உலகக் கோப்பையில் நான் ஆட மாட்டேன் - மித்தாலி ராஜ்

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, நான்காவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.  

mithali raaj


ஒருகட்டத்தில், இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருந்தபோதும், இறுதிக் கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் தோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை. இந்திய அணியின் அனுபவ வீராங்கனையும் கேப்டனுமாகிய மித்தாலி ராஜ், தனது அணியை நினைத்துப் பெருமைப்படுவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

போட்டி முடிந்த பின்னர், பரிசளிக்கும் நிகழ்வில் பேசிய மித்தாலி ராஜ், "இங்கிலாந்துக்கும் இந்தப் போட்டி எளிதாக அமையவில்லை. எனினும், கடினமானகட்டத்தில் அந்த அணி சிறப்பாக ஆடியதுதான் போட்டியை எங்களிடமிருந்து எடுத்துச்சென்றுவிட்டது. எனது அணியை நினைத்துப் பெருமைப்படுகிறேன். அவர்கள் எந்த எதிரணிக்கும் எளிதாக வாய்ப்பை  வழங்கிவிடவில்லை. எங்கள் அணியின் பேட்டிங் அனுபவம் குறைவுதான். இந்தத் தொடர் அவர்களுக்கு நல்ல அனுபவமாக இருந்திருக்கும். எனது கிரிக்கெட் எதிர்காலத்தைப் பொறுத்தவரை, மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாட முடியும் என்று நினைக்கிறேன். அடுத்த உலகக் கோப்பை அணியில் நான் இருக்க மாட்டேன்" என்றார்.

மித்தாலி ராஜ், 1999-ல் அறிமுகமாகி, தொடர்ந்து 18 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடிவருகிறார். இந்திய அணியை இரு முறை இறுதிப் போட்டி வரை அழைத்துச்சென்ற பெருமை இவருக்கு உண்டு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!