உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் இரண்டு பதக்கங்கள்!

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா உயரம் தாண்டுதலில் மேலும் இரண்டு பதக்கங்களைக் குவித்துள்ளது.

பாரா சாம்பியன்ஷிப்

இங்கிலாந்தில் லண்டன் மாநகரில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 8 வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. ஜூலை 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையில் நடைபெறும் இப்போட்டிகளில் உலகின் பல்வேறு நாட்டின் வீரர்களும் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

இந்தியாவின் ஷரத்குமார், ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் 1.84 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கமும், வருண் பட்டி என்ற மற்றொர் இந்திய வீரர் 1.77 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கமும் வென்றனர். முன்னர் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் வருண் பட்டி பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா இதுவரை ஒரு தங்கம், இரண்டு வெள்ளிகள் மற்றும் இரண்டு வெண்கலங்கள் என மொத்தம் ஐந்து பதக்கங்கள் வென்றுள்ளன.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!