உலகக் கோப்பை வெற்றிக்குப் பின் இங்கிலாந்து கேப்டன் என்ன சொன்னார் தெரியுமா?

வெறும் 9 ரன்களில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து கோப்பையைத் தவறவிட்டது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. 1973, 1993, 2009 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ள இங்கிலாந்து, இம்முறையும் இறுதிப் போட்டியில் வென்று நான்காவது முறையாக சாம்பியன் அந்தஸ்தை பெற்றுள்ளது. 

Heather Knight and Mithali raj

நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 228 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து கோப்பை வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி, ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 191 ரன்கள் எடுத்திருந்தது. கண்டிப்பாக கோப்பை இந்திய அணிக்குத்தான் என்ற நினைத்தபோதுதான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட், 'கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியிலும் முழு முயற்சியையும் திறனையும் கொடுக்க வேண்டும். கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு. இந்த விளையாட்டில் அழுத்தம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இறுதிப் போட்டியில் அதுதான் நடந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், 190 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் இந்தியா விளையாடிக்கொண்டிருந்தபோது, அவர்கள் வசம்தான் ஆட்டம் இருந்தது. ஆனால், நாங்கள் போராடி ஆட்டத்துக்குள் வந்தோம். இந்தப் போர் குணம்தான் இந்தத் தொடரில் எங்கள் கதையாக இருந்துள்ளது' என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!