நாடு திரும்பும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி: காத்திருக்கிறது பாராட்டு விழா!

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து நான்காவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், கிரிக்கெட் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். பிரதமர் மோடியும் இறுதிப் போட்டிக்குப் பிறகு, ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். 

இதையடுத்து, அவர்கள் வரும் புதன்கிழமை நாட்டுக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர்கள் திரும்பும் பட்சத்தில், பாராட்டு விழா நடத்த பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது. இந்தப் பாராட்டு விழாவின்போது, இந்திய அணியில் இருக்கும் வீராங்கனைகளுக்குத் தலா 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்தப் பாராட்டு விழா எப்போது, எங்கு நடைபெறும் என்பது குறித்து அதிகாரபூர்வத் தகவல் இல்லாதபோதும், பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!