'நாங்கள் இறுதிப் போட்டியில் இருப்போம் என்று யாரும் நம்பவில்லை!'- இந்தியாவின் ஸ்டார் பௌலர் கோஸ்வாமி ஓபன் டாக்

கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இருப்பினும், இந்திய அணி, இந்தத் தொடரில் விளையாடிய விதத்தால் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

கோஸ்வாமி

இந்நிலையில் இந்தியாவின் ஸ்டார் பௌலரான ஜூலன் கோஸ்வாமி, 'இந்தத் தொடர் ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே நாங்கள் இறுதிப் போட்டி வரை வருவோம் என்று யாரும் நம்பவில்லை. ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியுடன் முடிக்க, நம்பிக்கை பெற ஆரம்பித்தோம். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்படும் போது, கண்டிப்பாக வெற்றி எங்கள் பக்கம்தான் என்பது தெரிந்தது. இந்தத் தொடரின் முதலிலிருந்தே அனைவரும் அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தனர். ஆனால் இறுதிப் போட்டியில்  தோல்வியடைந்தாலும் இந்தத் தொடரில் விளையாடியதை நினைத்து சந்தோஷப்பட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இறுதிப் போட்டியில் நாங்கள் நினைத்தது போல் விளையாட முடியவில்லை. இந்தத் தொடரைப் பொறுத்தவரை, தனித்தனியாக நிறைய பேர் நன்றாக விளையாடினோம். ஆனால், ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட இன்னும் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டி இருக்கின்றன' என்று மனம் திறந்து பேசியுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!