முதல் டெஸ்ட்டில் ராகுல் விலகல்; அபினவ் முகுந்துக்கு வாய்ப்பு?

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியில், தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

rahul


இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி - ட்வென்டி போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட்,  காலே மைதானத்தில்  நாளை தொடங்குகிறது. 

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான லோகேஷ் ராகுல், தற்போது வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால், அவர் முதலாவது ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்று பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த அபினவ் முகுந்துக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. அபினவ் முகுந்த், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான தவானுடன் இணைந்து களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சி ஆட்டத்தில், ராகுல் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!