மித்தாலி ராஜுக்கு ஐ.சி.சி புதிய கெளரவம்!

இந்திய மகளிர் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், ஐ.சி.சி-யின் உலக அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளர்.

mithaali raj


இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. இறுதிப்போட்டியில் தோற்றாலும் அனைவரின் மனதையும் வென்றுவிட்டார்கள். அதனால்தான், வாழ்த்துகளும் பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. 

தற்போது, இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், ஐ.சி.சி-யின் 11 பேர் கொண்ட உலக அணிக்கு கேப்டனாக  நியமிக்கப்பட்டுள்ளார்.  இது, மித்தாலி ராஜுக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய கெளரவம். இந்திய அணியிலிருந்து ஹர்மன்ப்ரீத் கவுர்  மற்றும் இளம் வீராங்கனை தீப்தி ஷர்மா  ஆகியோரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். 
இங்கிலாந்து அணியிலிருந்து நான்கு வீராங்கனைகளும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மூன்று வீராங்கனைகளும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு வீராங்கனையும் ஐ.சி.சி அணியில் தேர்வாகி உள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!